காங்கிரஸ் கட்சியினரின் 5 ஆயிரம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்...

காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்பட 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியினரின்  5 ஆயிரம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்...
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு நீண்ட போராட்டத்துக்கு பின் டிவிட்டர் நிறுவனம் இணங்கியுள்ளது. புதிய டிஜிட்டல் விதிகளின் படி நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க கூடிய பதிவுகளை நீக்கவும் தேவைப்பட்டால் அந்த கணக்கை முடக்கவும் டிவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
 
இதையடுத்து டெல்லியில் 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். அதன் புகைப்படத்தை ராகுல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி ராகுலின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதையடுத்து பதிவு நீக்கப்பட்ட பிறகு ராகுலின் டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்பட 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் வினித் பூனியா டிவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ' ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், பொதுச்செயலாளருமான அஜெய் மகான், கட்சியின் மக்களவை கொறடா மாணிக் தாகூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து தவறுகளுக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்றும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் டிவிட்டர் கணக்குகளை முடக்குவதன் மூலம் தாங்கள் போராடுவதை தடுத்துவிடலாம் என மோடி நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.