கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு வாலிபர்கள் கைது...

புதுச்சேரியில் உணவகம் தொடங்க கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு வாலிபர்களை போலிசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும்  சிறையில் அடைத்தனர்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு வாலிபர்கள் கைது...

புதுச்சேரியில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தன்வந்திரி நகர் சார்பு ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையிலான போலிசார் கவுண்டபாளையம் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் நேற்று மாலை ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர், அதில் அவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது, இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் குமர்குருபள்ளத்தை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் லாஸ்பேட்டை பகுதியில் ஒரு உணவு விடுதி திறக்க உள்ளதாகவும் அதற்கு பணம் தேவைபட்டதால் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது,

அதனைதொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் இருவரையும் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.