உ.பி. யில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை... பிரியங்கா காந்தி ட்வீட்

உத்திரபிரதேச மாநிலத்தில் முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! பின்னர் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை! இப்போது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு இல்லை!  என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தி தெரிவித்துள்ளார். 

உ.பி. யில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை... பிரியங்கா காந்தி ட்வீட்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரின் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மதியம் வழக்கறிஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும்! வழக்கு தொடுத்தவர்களுக்கு நீதியும் வழங்கக்கூடிய நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டு கொள்ளப்பட்டதற்கு பலர் கண்டன குரல் எழுப்ப தொடங்கினார்கள்.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், உத்திரபிரதேச காங்கிரஸ் தேர்தல் பொருப்பாளருமான பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, சட்டம் மற்றும் நீதித்துறை நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த தூண் எனவும் ஷாஜகான்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தின் மூலம் உத்திரபிரதேச மாநிலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! பின்னர் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை! இப்போது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு இல்லை! என தெரிவித்துள்ளார்.