பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு...

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பூசியை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு...

மேற்கு வங்க தேர்தலின் போது, பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வந்தது. பாஜகவின் கடுமையான நெருக்ககளை கடந்து மேற்கு வங்கத்தில்  3 வது  முறையாக ஆட்சி அமைத்து  சாதனை படைத்திருக்கிறார் மமதா பானர்ஜி.

முதலமைச்சராக பதவி ஏற்று ஒரு மாதம் கடந்த நிலையில்   மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு  வருகை தந்துள்ள  மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை ,இன்று  நேரில் சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில்  நடந்த சந்திப்பில் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மம்தா ஆலோசனை நடத்தினார்.

மோடி சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி,மத்திய அரசிடம் இருந்து, மேற்கு வங்கத்துக்கு ஒதுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை மற்றும் கூடுதல் தடுப்பூசி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தியதாக தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சி  திட்டங்களுக்கு  கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் மமதா கூறினார்.

இதன் தொடர்ச்சியாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை மமதா நேரில் சந்திக்கவுள்ளார்.மேலும், டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை காலை ஆலோசனை நடத்தவுள்ளார்.