ஆப்கன் புதிய அதிபர் முல்லா அப்துல் கனி பராதர் ?

ஆப்கனிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு அதிபராக முல்லா அப்துல் கனி பராதர் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கன் புதிய அதிபர்  முல்லா அப்துல் கனி பராதர் ?

முல்லா பராதர் 1968 இல் உருஸ்கான் மாகாணத்தின் டேராவுட் மாவட்டத்தின் விட்மாக் கிராமத்தில் பிறந்தார். அவர் துர்ரானி வகுப்பைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயும் இதே வகுப்பைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1994 ல் தாலிபானை உருவாக்கிய நான்கு பேரில் முல்லா அப்துல் கனி பராதரும் ஒருவர்.

1994 இல் தாலிபான் அமைப்பு உருவான பிறகு, அவர் ஒரு தளபதி மற்றும் செயல்திட்ட வகுப்பாளரின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். 2001 -ல், அமெரிக்க தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அவர் நேட்டோ படைகளுக்கு எதிரான கிளர்ச்சியின் முக்கியத் தலைவராக இருந்தார்.

2010 பிப்ரவரியில், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நடத்திய கூட்டு நடவடிக்கையில், பாகிஸ்தானின் கராச்சியில் அவர் கைது செய்யப்பட்டார். 2012 வரை முல்லா பராதரைப் பற்றி அதிகம் தெரியவரவில்லை. அந்த நேரத்தில், சமாதானப் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க ஆப்கானிஸ்தான் அரசு விடுவிக்க முயன்ற கைதிகளின் பட்டியலில் பராதரின் பெயர் முக்கிய இடத்தை பிடித்து இருந்தது......


2013- செப்டம்பரில் அவர் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார், ஆனால் அவர் பாகிஸ்தானில் தங்கினாரா அல்லது வேறு எங்காவது சென்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. முல்லா பராதர், தாலிபன் தலைவர் முல்லா முகமது உமரின் மிகுந்த நம்பிக்கைக் குரியவராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்டபோது தாலிபன்களின் இரண்டாவது உயர் தலைவராக இருந்தார்.

2018-இல், கத்தாரில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாலிபன் அலுவலகம் திறந்தபோது, அவர் தாலிபன்களின் அரசியல் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டார். முல்லா பராதர் எப்போதும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருந்தார். மற்ற தாலிபன் தலைவர்களைப் போலவே, முல்லா பராதரும் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்டார். அவர் பயணம் செய்யவும், ஆயுதங்கள் வாங்கவும் தடை இருந்தது.

2010 இல் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் குறிப்பிட்ட பொது அறிக்கைகளை வெளியிட்டார்.2009 இல், அவர் நியூஸ்வீக் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வளர்ந்து வரும் முன்னிலை குறித்து பதிலளித்த அவர், தாலிபன்கள் அமெரிக்காவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த விரும்புவதாக கூறினார். பராதரின்  மனைவி, முல்லா உமரின் சகோதரி ஆவார்.  முல்லா பராதர் தாலிபன்களின் முழு பணத்தையும் கண்காணிப்பதுடன் . ஆப்கானிஸ்தான் படைகளுக்கு எதிரான மிக பயங்கரமான தாக்குதல்களை அவர் வழிநடத்தினார்.

எதிரிகள் எங்கள் நிலத்திலிருந்து அழிக்கப்படும்வரை, ஜிஹாத் எனப்படும் புனிதப்போர் தொடரும் என்று அவர் கூறினார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் தாலிபனின் தலைவர் ஹிப்துல்லா அங்குந்த்ஸாதா உள்ளார் இவர்  ஒரு இஸ்லாமிய அறிஞர். கந்தஹாரை சேர்ந்தவரான இவர் அவர்தான் தாலிபன்களின் திசையை மாற்றி அதன் தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தார் என்று நம்பப்படுகிறது. ஹிப்துல்லா என்ற பெயரின் பொருள் 'அல்லாவின் பரிசு'. அவர் நூர்சாய் வகுப்பைச் சேர்ந்தவர்