கேப்டன் வருண் சிங் மறைவு...பிரதமர் மோடி இரங்கல்...!!!

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேப்டன் வருண் சிங் மறைவு...பிரதமர் மோடி இரங்கல்...!!!
Published on
Updated on
1 min read

கடந்த 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்னும் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர்கள்  உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயம் அடைந்தார்.  80% தீக்காயங்களுடன் அவருக்கு பெங்களூரு கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

குரூப் கேப்டன் வருண் சிங்  மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய அரும்பெரும் சேவையை இந்த நாடு என்றும் மறக்காது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்’’ எனக் கூறியுள்ளார்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

வருண் சிங்கின் மறைவை அறிந்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன். இறுதி மூச்சு வரை போராடிய உண்மையான போராளி அவர். வருண் சிங் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும்  என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com