மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க பர்தமான் பகுதியில் இருந்து பந்தல் வரை செல்லும் பயணிகள் ரயில், சக்திகர் ரயில் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது.
இதையும் படிக்க : தூய்மைப் பணிகள் சிறப்பாக நடக்கிறது...அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
ரயில் தடம் புரண்ட தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மீட்பு படையினர் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட இரண்டு பெட்டிகளில் சிக்கித் தவித்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர்.
மேலும், விபத்துக்கான காரணம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில், விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.