டாஸ்மாக்' கடைகளில் ரூ.148 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை....புத்தாண்டு தடை மற்றும் மழை காரணமாக விற்பனை மந்தம்...!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளில் நேற்று ஒரே நாளில் 148 கோடி ரூபாய்க்கு  மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக்' கடைகளில்  ரூ.148 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை....புத்தாண்டு தடை மற்றும் மழை காரணமாக விற்பனை மந்தம்...!
Published on
Updated on
1 min read

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளில், தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி வருகின்றனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில், மதுப்பிரியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், நேற்று ஒரே நாளில் 148 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளது..அதிலும் குறிப்பாக, சென்னையில் 41.45 கோடியும், திருச்சி 26.52 கோடி, சேலம் 25.43 கோடி, மதுரை 27.44 கோடி, கோவை 26.85 கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைப்பெற்றுள்ளது...

மழை காரணமாகவும் , சபரிமலை சீசன் காரணமாகவும், புத்தாண்டு கொண்டாட்டம் திறந்தவெளி தடை காரணமாகவும் விற்பனை சரிந்துள்ளதாகவும்,  கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூபாய் 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com