நாடு முழுவதும் 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்...

நாடு முழுவதும் 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்...
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் தற்போது வரை 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் - கடந்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 97 லட்சத்து 79 ஆயிரத்து 304 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 67 லட்சத்து 18 ஆயிரத்து 723 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது 

முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 50 லட்சத்து 79 ஆயிரத்து 964 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 83 லட்சத்து 55 ஆயிரத்து 982 பேருக்கு 2-ஆம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயது பிரிவினரில் 1 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் .45 முதல் 60 வயது பிரிவினரில் 6 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 484 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.99 லட்சத்து 15 ஆயிரத்து 278 பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரத்து 863 பேர் முதல் டோசும், 1 கோடியே 83 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக் கொண்டுள்ளனர்.நேற்று ஒரேநாளில் 18 முதல் 44 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 42 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com