வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்...!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்...!
Published on
Updated on
1 min read

ஆண்டின் முதல் செயற்கைக்கோளான SSLV D2 ராக்கெட்டை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது.


புவிநோக்கு செயற்கைக்கோள், ஜானுஸ்-1, ஆசாதிசாட்-2 ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் SSLV D2 ராக்கெட் அனுப்பும் பணி முன்னெடுக்கப்பட்டது. அலைக்கற்றை கண்காணிப்பு அமைப்பு, அதிநவீன மைக்ரோவேவ் சவுண்டருடன் புவிநோக்கு செயற்கைக்கோளும், மென்பொருள் இயக்க பயன்பாட்டிற்காக ஜானுஸ்-1 செயற்கைக்கோளும் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து 3 செயற்கைக்கோள்களுடன் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, SSLV D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்ததால் விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக  மகிழ்ச்சி தெரிவித்தார்.

எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. தொடர்ந்து இரு சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்ட SSLV D1 ராக்கெட், தோல்வியில் முடிந்த நிலையில் இன்று  D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com