சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள் என்பதால், அண்டை மாநிலமான தமிழகம், மற்றும் கர்நாடகா, ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள கடற்கரைகள், ஆசிரமம், பிரெஞ்சு கட்டிடங்கள், கோயில்கள் ஆகியவற்றை கண்டுகழிக்கின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று பல்வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரி வந்துள்ள சுற்றுலா பயணிகள் கடற்கரையில் கடலில் குளிக்க கூடாது என்று போலீசார் வைத்துள்ள எச்சரிக்கை பலகை அருகேயே ஆபத்தை உணராமல் கொட்டும் மழையில் கடலில் இறங்கி குளித்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே கடலில் குளிப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் கடற்படை போலீசார் யாரும் ஈடுப்படவில்லை, மேலும் கடந்த 2 மாதங்களில் இதே கடற்கரையில் 5 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழிந்தது குறிப்பிடத்தக்கது.