ஒரே பந்து 3 ரன்கள்.. ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி..!

பவுலிங்கில் பலத்தை நிரூபித்து வெற்றியை ருசித்த ஜிம்பாப்வே..!

ஒரே பந்து 3 ரன்கள்.. ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி..!

ஆஸ்திரேலியா-வங்கதேசம்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மொத்தம் 3 போட்டிகள் 
நடைபெற்றது. சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியும், வங்கதேச அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற 
தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்கள் பறிகொடுத்து 205 ரன்கள் எடுத்திருந்தது. 

வங்கதேசம் தோல்வி:

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தது. அத்தோடு 20 ஓவர் முடிவில் வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

இந்தியா வெற்றி:

அடுத்ததாக இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் நடைபெற்ற லீக் போட்டியில், இந்தியா 56 ரன்கள் 
வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே:

இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் நடைபெற்றது. இந்தியாவுடனான தோல்வியை சரிசெய்யும் முனைப்பில் பாகிஸ்தான் இந்தப் போட்டியில் களமிறங்கியது. 

95 ரன்களில் 5 விக்கெட்:

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே ஆட்டம் கண்ட ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. உதாரணத்திற்கு அந்த அணி 95 ரன்கள் எடுப்பதற்கும் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 

ஜிம்பாப்வே 20 ஓவரில் 130 ரன்கள்:

20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சேன் 
வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் 4 விக்கெட்களையும், ஷதாப் கான் 3 
விக்கெட்களையும் வீழ்த்தினர். 

பவுலிங்கில் கலக்கிய ஜிம்பாப்வே:

இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில்  களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்திருந்தார். பவுலிங்கில் இம்முறை தங்களது பலத்தை காண்பித்த ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரசா 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

1 ரன் வித்தியாசத்தில் வெற்றி:

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் பாகிஸ்தானுக்கு தேவைப்பட்டது. அஃப்ரிடி அந்த பந்தை தூக்கி அடிக்க, 2 ரன்கள் எடுத்துக் கொண்டிருந்த போது, ஜிம்பாப்வே வீரர்களின் துரிதத்தால் ரன் அவுட் ஆன நிலையில், ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.