44வது செஸ் ஒலிம்பியாட்.. இந்திய நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா தோல்வி..!

44வது செஸ் ஒலிம்பியாட்.. இந்திய நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா தோல்வி..!

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏ பிரிவில் இந்திய வீரர் வெற்றி: இந்திய ஓபன் அணியின் ஏ பிரிவினர், ரோமானியா நாட்டு வீரர்களுடன் மோதினர். இதில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசி மட்டும் வெற்றி பெற, மற்ற மூன்று போட்டிகளும் சமனில் முடிவடைந்தது. 

பி பிரிவில் பிரக்ஞானந்தா தோல்வி: ஓபன் அணியின் பி பிரிவில் விளையாடிய பிரக்ஞானந்தா, ஸ்பெயின் வீரர் சாண்டோஸை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்-ஐ தேர்வு செய்து விளையாடிய அவர், தோல்வியை தழுவினார். இதே பிரிவில் விளையாடும் குகேஷ், அதிபன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சி பிரிவில் மகளிர் அணி வெற்றி: ஓபன் அணியின் சி பிரிவினர், சிலி நாட்டு வீரர்களுடன் மோதினர். இதில் 2 புள்ளி 5க்கு, 1 புள்ளி 5 எனும் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதேபோல், இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவினர், பிரான்ஸூடன் மோதினர். இதில், வீராங்கனை தான்யா, வெற்றி கண்டார். ஜார்ஜியாவுடன் மோதிய மகளிர் அணியின் பி பிரிவினர், 3-1 எனும் புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தனர். சி பிரிவில் உள்ள மகளிர் அணி, பிரேசில் அணியுடன் விளையாடிய நிலையில், 2-2 எனும் புள்ளிகளின் அடிப்படையில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.