வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 4வது டி20 போட்டி.. தொடரை கைப்பற்றிய இந்தியா..!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது..!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 4வது டி20 போட்டி.. தொடரை கைப்பற்றிய இந்தியா..!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம் அளித்தனர். பின்னர் வந்த தீபக் ஹுடா 21 ரன்களும், ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் சஞ்சு சாம்சன் 30 ரன்களும்,  அக்ஷர் பட்டேல் அதிரடியாக 20 ரன்களும் விளாசினர். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

தொடரை கைப்பற்றிய இந்தியா: இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 132 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

கடைசி டி-20 இன்று: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் இந்தியநேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.