மழையால் கைவிடப்பட்ட 5வது டி-20 போட்டி  : டிராவில் முடிந்த தொடர் !!

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய கடைசி மற்றும் 5-வது டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

மழையால் கைவிடப்பட்ட 5வது டி-20 போட்டி  : டிராவில் முடிந்த தொடர் !!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், 5வது மற்றும் கடைசி டி-20 போட்டி, பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் மழை நின்றவுடன் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கம் அளித்த இஷான் கிஷன் 15 ரன்களிலும், ருத்துராஜ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய அணி 3 புள்ளி 3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மழை நிற்காததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த தொடர் 2க்கு 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.