7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி.. இந்திய அணி அறிவிப்பு..!

முதல் போட்டியிலேயே இந்திய அணி அமெரிக்காவுடன் மோதவுள்ளது..!

7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி.. இந்திய அணி அறிவிப்பு..!

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை:

7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, மும்பை ஆகிய நகரங்களில் வருகிற 11-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 

இந்திய அணி அறிவிப்பு:

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதில் இடம்பெறவுள்ள 21 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முதல் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதல்:

இதில் இந்தியா வரும் 11-ம் தேதி அமெரிக்காவுடன் மோதவுள்ளது. அதனை தொடர்ந்து 14-ம் தேதி மொராக்கோ அணியுடனும், 17-ம் தேதி பிரேசில் அணியுடனும் மோதவுள்ளது.