அகில இந்திய கல்லூரிகளின் கூடைப்பந்து போட்டி துவங்கியது!!!

தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கூடைப்பந்து போட்டி ஜிம்கானா கிளப் அரங்கில் துவக்கியது. பெண்களுக்கான முதல் போட்டியில் சென்னை எம்ஒபி வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்களுக்கான போட்டியில் கேரளா வர்மா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

அகில இந்திய கல்லூரிகளின் கூடைப்பந்து போட்டி துவங்கியது!!!

தூத்துக்குடி மாவட்ட கூடப்பந்து கழகம் சார்பில், 12வது அகில இந்திய அளவிலான கல்லூரி கூடைப்பந்து போட்டி ஜிம்கானா கிளப் அரங்கில் துவக்கியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டியை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். இன்று தொடங்கி, வருகிற 20ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில், பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகம், சென்னை எம்சிசி, சென்னை லயோலா கல்லூரி, கேரளா மாநிலம் வர்மா கல்லூரி, திருவனந்தபுரம் இவானியஸ் கல்லூரி, சென்னை சத்யபாமா யுனிவர்சிட்டி, கேரளா சென்ட் பெர்க்மான்ஸ் காலேஜ்,  மற்றும் எஸ் ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் ஆப் டெக்னாலஜி கல்லூரி உள்ளிட்ட 8 அணிகளும், பெண்கள் பிரிவில், பெங்களூர் வைஷ்ணவி காலேஜ்,  சென்னை எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி, கேரளா புனித ஜோசப் கல்லூரி  மற்றும் திருவனந்தபுரம்  இவானியஸ் கல்லூரி அணி, பெங்களுர் ஜெயின் கல்லூரி உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டன.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான முதல் போட்டியில் எம்ஒபி வைஷ்ணவா கல்லூரி சென்னை அணியும், செயிண்ட் ஜோசப் கேரளா கல்லூரி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் எம்ஒபி வைஷ்ணவா கல்லூரி சென்னை அணி 56 : 48 புள்ளிகள் கணக்கில் செயிண்ட் ஜோசப் கேரளா கல்லூரி அணியை வென்றது.

இதில் கேரளா வர்மா கல்லூரி அணியும் சென்னை சத்யபாமா கல்லூரி அணிகள் மோதின. இதில் 63 : 40 என்ற புள்ளிகள் எடுத்து கேரளா வர்மா கல்லூரி அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டி வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ஆண் மற்றும் பெண் அணிகளுக்கு தலா 25,000 ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் ஆண் பெண் அணிகளுக்கு தலா 20,000 ரூபாயும், மூன்றாம் இடத்தை பிடிக்கும் ஆண் மற்றும் பெண் அணிகளுக்கு தலா 15,000 ரூபாயும், நான்காம் இடத்தை பிடிக்கும் ஆண் மற்றும் பெண் அணிகளுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.