11 பதக்கங்கள் பெற்று அசத்திய தமிழ்நாட்டு அணி...

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பிக்கள் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 11 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

11 பதக்கங்கள் பெற்று அசத்திய தமிழ்நாட்டு அணி...

இந்திய பிக்கல் பால் சங்கம் நடத்திய இரண்டாவது தேசிய அளவிலான பிக்கல் பால் சேம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா,மகாராஷ்டிரா,ராஜஸ்தான், குஜராத்,டெல்லி,பீகார்,கோவா,மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

மேலும் படிக்க | பா.ஜ.க.வில் இணைந்தால் தான் பதவியா? அப்படிப்பட்ட பதவியே தேவையில்லை... ரசிகர்கள் காட்டம்..!

இதில் தமிழக அணி பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது.குறிப்பாக தாங்கள் பங்கேற்ற இரண்டாவது தேசிய அளவிலான போட்டியிலேயே 11 பதக்கங்களை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.