அரபு கோப்பை கால்பந்து இறுதி போட்டி... 2 கோல் அடித்து அல்ஜீரியா அணி சாம்பியன்...

கத்தார் நாட்டில் நடைபெற்ற அரபு கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அல்ஜீரியா அணி 2 கோல்கள் அடித்து துனீசியா அணியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது.

அரபு கோப்பை கால்பந்து இறுதி போட்டி... 2 கோல் அடித்து அல்ஜீரியா அணி சாம்பியன்...

தோஹா நகரில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியை காண மைதானம் முழுவதும் இரு நாட்டு ரசிகர்கள் நிறைந்து காணப்பட்டனர். ஆட்டத்தின் துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இரு அணிகளும் சம்பலத்துடன் மோதின.

ஆட்டத்தின் கடைசிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மீண்டும் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு ஆட்டம் நடைபெற்றது. இதில் சுதாரித்து கொண்டு விளையாடிய அனுபவம் வாய்ந்த அல்ஜீரிய வீரர்களில் Amir Sayoud முதல் கோலை அடித்து வெற்றியை உறுதிபடுத்தினார். இதையடுத்து தனியாக பந்தை கடத்தி சென்ற Yacine Brahimi 2-ம் கோலை அடித்து அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார். இறுதியில் வாகை சூடிய அல்ஜீரிய அணிக்கு அரபு கோப்பை பரிசளிக்கப்பட்டது.