"ரோஹித் ஷர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள்".. முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் ட்விட்?

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் கவனமாக இருங்கள் என முகமது கெயிப் ட்விட் செய்து உள்ளார்.

"ரோஹித் ஷர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள்"..  முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் ட்விட்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், மேற்கிந்திய தீவுகள் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மேலும் சர்வதேச போட்டியில் தொடர்ந்து 7 தொடர்களையும், 7 போட்டிகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச டி20 தொடரில் சொந்த மண்ணில் அவர் இதுவரை 16 போட்டிகளில் 15 போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். இதேபோல தான் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் - 15 போட்டிகளிலும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன - 15 போட்டிகளில் வென்றுள்ளனர். இதேபோல், சொந்த மண்ணில் அதிக வெற்றி பெற்ற சாதனையும் ரோஹித் சர்மா படைத்தார்.

இந்நிலையில், ரோஹித் சர்மாவை பாராட்டி கிண்டலடித்து முகமது கெயிப் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ரோஹித் ஷர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவருடன் கை குலுக்கும் போது கூட கவனமாக இருங்கள். ஏனென்றால் ரோகித் சர்மா இப்போது தொடுவது எல்லாம் தங்கமாகி விடுகிறது என்று பதிவிட்டுள்ளார். 

மூன்றாவது பேட்ஸ்மனாக ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்குவது, சுழற்றி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது. பௌலர்களுக்கு வாய்ப்பு வழங்கி விக்கெட் எடுப்பது என அவரின் ஒவ்வொரு அசைவும், ஒரு மாஸ்டர் ஸ்டோர்க்காக இருப்பதாக முகமது கையிப் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியை  கேப்டன் பதிவில் இருந்து நீக்கியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இனிமேல் இந்திய அணி என்ன செய்ய போகிறது என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோஹித் சர்மா பல சாதனைகளை படைத்து வருகிறார்.