காமன்வெல்த்2022-காயம் காரணமாக தங்க மகன் ஓய்வு

காமன்வெல்த்2022-காயம் காரணமாக தங்க மகன் ஓய்வு

காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த முடியாததை எண்ணி நீரஜ் சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

உலக தடகள போட்டி:

ஞாயிற்றுக்கிழமை ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள போட்டியின் இறுதி ஆட்டத்தில் நீரஜ் சோப்ராவின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.  இந்த போட்டியில் நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றார்.  இதனைத் தொடர்ந்து இந்தியாவின் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்க கனவு நினைவானது.

காமன்வெல்த்2022:

2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம்மில் நடைபெறவுள்ளது.  இதில் இந்தியாவை பிரதிநித்துவம் செய்யும் வகையில் நீரஜ் சோப்ரா கொடி ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய ஒலிம்பிக் அமைப்பின் பொதுச்செயலாளர் :

”உலக தடகள போட்டியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்களன்று நீரஜ் சோப்ராவுக்கு எமார்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவக் குழு அவருக்கு ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க ஆலோசனை வழங்கியது" என்று இந்திய ஒலிம்பிக் அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா கூறியுள்ளார்.

நீரஜ் சோப்ரா வருத்தம்:

பர்மிங்காம்மில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் ஏமாற்றாமடைகிறேன்.  உலக தடகள போட்டியின் கடைசி எறிதலின் போது இடுப்பு பகுதியில் வலியை உணர்ந்தேன்.  மருத்துவ சோதனையில் இடுப்பில் சிறிய பிடிப்பு இருப்பதாக கூறினர் என்று நீரஜ் சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”உலக அளவில் இந்தியாவை பெருமையடைய செய்வதற்கான எனது வாய்ப்பை இழந்ததற்காக நான் வருத்துகிறேன்.  காமன்வெல்த் போட்டியில் கொடியை ஏந்தி செல்லும் நாட்களுக்காக காத்திருந்தேன்.  இப்போது அதற்கான வாய்ப்பில்லை என எண்ணும் போது ஏமாற்றமாக உள்ளது” என மேலும் கூறியுள்ளார்.