டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான போட்டிகள் இன்றுடன் நிறைவு...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மல்யுத்தம் மற்றும் ஈட்டி எறிதலில் இந்தியா பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான போட்டிகள் இன்றுடன் நிறைவு...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள், நாளையுடன் நிறைவு பெறுகின்றன. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகளும் நிறைவடைய உள்ளன. இன்றைய நாளில் 2 பதக்கங்களை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது.
மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், இந்தியாவின் பஜ்ரங் பூனியா களம் இறங்குகிறார். இதைப்போல ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றிற்கு, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் திறமையாக விளையாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த நீரஜ், இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி, இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.