விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்?

உலகில் உள்ள  90 சதவீதம் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைப் பார்க்க ஆர்வமாய் இருப்பதாக ஐசிசி  தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்?

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் ஒரே எதிர்ப்பு எப்பொழுது கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பார்கள் என்று, அப்படி ஒலிம்பிக் போட்டியில் சேத்தால் இந்தியாவுக்கு கண்டிப்பாக ஒரு தங்கம் கிடைக்கும் என்பது அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு. கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக் தொடர்களில் சேர்க்க  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தீவிர முயற்சி செய்து வருகின்றது.இந்த நிலையில் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க ஐசிசி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

1896ஆம் ஆண்டு கிரீஸின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற்றது. ஆனால், அப்போது எந்தவொரு நாடும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காததால், முதல் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தாலும், போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.அதில் கிரேட் பிரிட்டன் மற்றும்  பிரான்ஸ் உள்ளிட்ட இரண்டு அணிகள் மட்டுமே பங்கேற்றன.ஒலிம்பிக்கில், பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஹாலந்து அணிகள் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்தன.

பின்னர் இறுதி கட்டத்தில் ஹாலந்தும், பெல்ஜியமும் விலகியதால், பிரிட்டனும், பிரான்ஸும் நேரடியாக மோதிய இறுதிப்போட்டியில் பிரிட்டன் அணி வெற்றி வாகை சூடியது. அந்த போட்டியே ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமான கிரிக்கெட் போட்டியாக அமைந்து விட்டது. ஆம், பின்வரும் ஆண்டுகளில் போதுமான அணிகள் பங்கேற்காததால் கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்டனர்.

இந்த நிலையில் தான் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது குறித்து ஐசிசி தலைவர் பார்க்லே தனது விரிவான கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் எதிர்கால விளையாட்டுகளின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம் என்றும்  உலகளவில் எங்களுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைப் பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களை பொருத்த வரை தெற்காசியாவில், எங்கள் ரசிகர்கள் 92% இருந்து வருகிறார்கள்,அதே நேரத்தில் அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் எனவும் அப்படி கிரிக்கெட்டை இணைத்தால் அமெரிக்காவில் மெம்படுத்த உதவும் என கூறினார்.ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திரும்பும் நேரம் வந்துவிட்டது என்றார், லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்தால் 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி இடம் பெறும் என ஐசிசி மற்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.