ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது லீக் போட்டி :  டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !!

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது லீக் போட்டி :  டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !!

15வது ஐபிஎல் சீசன் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ரன், கேப்டன் வில்லியம்சன் 4 ரன், ராகுல் திரிபாதி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்கிராம், பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஷஷாங்க் 10 ரன்னில் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டி அரை சதம் கடந்து, 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி ஆகும்.