யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டம்... இங்கிலாந்து, டென்மார்க் அரையிறுதிக்கு தகுதி...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டம்... இங்கிலாந்து, டென்மார்க் அரையிறுதிக்கு தகுதி...
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின், காலிறுதி ஆட்டம் அஜர்பைஜானின் பாகுவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் செக் குடியரசு மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தின் இறுதியில், டென்மார்க் அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
 
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் உக்ரைன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிகரமாக விளையாடி அடுத்தடுத்த கோல்களை எடுத்தது. உக்ரைன் அணி இறுதிவரை கோல்கள் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 4 க்கு 0 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.