சிஎஸ்கேவின் புதிய கேப்டனை அறிவித்த தோனி..!

தல தோனிக்காகவே கிரிக்கெட் பார்ப்பவர்கள் ஏராளம். இதனை ஆண்டுகளாய் சிஎஸ்கேவின் கேப்டனாய் இருந்து பல வெற்றிகளை பெற்று தந்தவர் தோனி.

சிஎஸ்கேவின் புதிய கேப்டனை அறிவித்த தோனி..!

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்து உள்ளார். ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் தோனி. ரவீந்திர ஜடேஜா அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த சீசனுடன் தோனியின் கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெகா ஏலத்தில் ஜடேஜா தான் முதன்மை வீரராக ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்ட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.