வென்றும் வெளியேறிய ஜெர்மனி..! கதறியழுத பெல்ஜியம் ரசிகர்கள்..! 36 ஆண்டுகளுக்கு பின் சாதனை..!

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஆறுதல் வெற்றியுடன் ஜெர்மனியும் வெளியேறியது.
குரோஷியா - பெல்ஜியம் :
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் குரோஷியா அணியும், கால்பந்து உலகில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், பெல்ஜியம் வெளியேறியதையடுத்து குரோஷியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் பெல்ஜியம் ரசிகர்கள் மைதானத்திலேயே கதறியழுத காட்சி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று பெல்ஜியம் அணியின் பயிற்சியாளர் ரோபார்டோ மார்டின்ஸ் பதவி விலகினார்.
கனடா -மொராக்கோ:
கனடா, மொராக்கோ அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து அசத்திய மொராக்கோ, 36 ஆண்டுகளுக்குப்பின் உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்பெயின் - ஜப்பான்:
இந்நிலையில் ஸ்பெயினுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு கோல் வித்தியாசத்தில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் முன்னேறியது.
கோஸ்டா ரிக்கா - ஜெர்மனி:
கோஸ்டா ரிக்கா அணியை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மனி, ஆறுதல் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
இன்றைய போட்டிகள்:
இதைத்தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் இரவு 8.30 மணிக்கு தென்கொரியா - போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் கானா - உருகுவே அணிகளும் மோதிக்கொள்கின்றன.
இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு செர்பியாவுடன் ஸ்விட்சர்லாந்தும், அதே நேரத்தில் கேமரரூனுடன் பிரேசிலும் மோதுகின்றன.