இந்த அணி தான்ப்பா ஜெயிக்கும்…. துல்லியமாக சொல்வது ஒரு யானை  

German elephant predicts French win in Euros game

இந்த அணி தான்ப்பா ஜெயிக்கும்…. துல்லியமாக சொல்வது ஒரு யானை   

யூரோ கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ஜெர்மனியில் உள்ள யானை ஒன்று துல்லியமாக கணித்து சொல்வது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடைபெற்று வரும் போட்டியில், எந்த அணி வெற்றி பெறும் என்று ஜெர்மனியில் உள்ள யசோதா என்ற 41 வயது யானை ஒன்று துல்லியமாக கணித்து வருகிறது. அதன்படி, நேற்று ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதிய போட்டியில் எந்த அணி வெல்லும் என யானையை கொண்டு கணிக்கப்பட்டது. அதாவது. வெள்ளிப் பெட்டி ஒன்றில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு கொடிகள் வைக்கப்பட்டன. அதில், யசோதா பிரான்ஸ் கொடியை எடுத்ததால் அந்த அணியே வெல்லும் என கணிக்கப்பட்டது. அதேபோல், நேற்றைய ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனியை பிரான்ஸ் அணி வென்றது.

முன்னதாக பிபா உலக கோப்பைக்காக நடைறெ்ற போட்டிகளில் எந்த அணி வெல்லும் என ஆமை ஒன்று கணித்தது குறிப்பிடத்தக்கது.