மித்தாலி ராஜின் சாதனையை முறியடித்த ஹர்மன் ப்ரீத்.. முன்னணி வீரர்களை ஓரங்கட்டி வரலாறு படத்துள்ளார்..!

76 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன் ப்ரீத் கவுர்..!

மித்தாலி ராஜின் சாதனையை முறியடித்த ஹர்மன் ப்ரீத்.. முன்னணி வீரர்களை ஓரங்கட்டி வரலாறு படத்துள்ளார்..!

இங்கிலாந்து-இந்தியா:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 

143 ரன்கள் எடுத்து அசத்திய ஹர்மன்:

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்தியா முதலில் களமிறங்கியது. அந்த வகையில் 4-வதாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 111 பந்துகளில் 18 ஃபோர், 4சிக்ஸ் என மொத்தம் 143 ரன்கள் எடுத்து அசத்தினார். 

தோல்வியடைந்த இங்கிலாந்து:

இதன் மூலம் இந்திய அணி 333 ரன்களை குவித்தது. 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் 44.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. 

3,000 ரன்களை விரைவாக கடந்த வீராங்கனை:

இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது ஹர்மன் ப்ரீத் கவுன் தான். 143 ரன்கள் எடுத்ததன் விளைவாக, 3,000 ரன்களை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக மிதாலி ராஜ் இந்த சாதனையை பெற்றிருந்தார். அதாவது 88 போட்டிகளில் விளையாடி 3,000 ரன்களை கடந்திருந்தார் மிதாலி ராஜ். 

மிதாலி ராஜ்ஜை ஓரம் கட்டிய ஹர்மன்:

ஆனால் மிதாலி ராஜின் சாதனையை அவரிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறார் ஹர்மன் ப்ரீத். மிதாலி ராஜ் 88 போட்டிகளில் எடுத்த 3,000 ரன்களை, ஹர்மன் ப்ரீத் 76 போட்டிகளிலேயே அடைந்து புதிய வரலாறு படைத்திருக்கிறார். 

3,000 ரன்களை கடந்த 3வது நபர்:

அத்துடன், இந்திய அளவில் விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது நபர் என்ற பெருமையும் ஹர்மன் ப்ரீத் பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர்.