அடுத்தாண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்

அடுத்தாண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்

அடுத்தாண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர். இரண்டு ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் அணியின் கடைசி ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வார்னர் விலகுகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஹைதராபாத் தனது இரண்டாவது வீடு என்றும், அடுத்தாண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட விரும்புவதாகவும்  வார்னர் தெரிவித்துள்ளார்.