5-வது டெஸ்ட் ரத்தால் இங்கிலாந்துக்கு பெரிய அளவில் இழப்பீடு? ஐசிசியிடம் சென்ற பஞ்சாயத்து...

5-வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்ட விகராத்தில்  ஐ.சி.சி. தலையிட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

5-வது டெஸ்ட் ரத்தால் இங்கிலாந்துக்கு பெரிய அளவில் இழப்பீடு?  ஐசிசியிடம் சென்ற பஞ்சாயத்து...

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவர்கள் களம் இறங்க தயங்கியதால் இந்த டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது.டெஸ்டில் ஆடும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வற்புறுத்திய போதிலும் இந்திய வீரர்கள் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் 5-வது டெஸ்ட் ரத்து விவகாரத்தில் ஐ.சி.சி உறுதியான முடிவை எடுக்க கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. ஐ.சி.சி. விதிப்படி, கொரோனா அச்சத்தை சுட்டிகாட்டி இந்த டெஸ்ட் கைவிடப்பட்டால் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதாகி விடும். இதனால் இங்கிலாந்துக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்படும்.