உங்களை நீங்கள் நம்பினால்... தினேஷ் கார்த்திக்கின் வைரல் ட்வீட்..!

உங்களை நீங்கள் நம்பினால், அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும் என இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

உங்களை நீங்கள் நம்பினால்... தினேஷ் கார்த்திக்கின் வைரல் ட்வீட்..!

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய டி-20 கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு,  இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தனது ரீ-என்ட்ரி குறித்து ட்வீட் செய்துள்ள தினேஷ் கார்த்திக், "உங்களை நீங்கள் நம்பினால். அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி என்றும் கடின உழைப்பு தொடரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.