1-1 என சமனில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா.. வெற்றியை தீர்மானிக்கும் இன்றைய கடைசி போட்டி..!

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வெல்லுமா இந்தியா?

1-1 என சமனில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா.. வெற்றியை தீர்மானிக்கும் இன்றைய கடைசி போட்டி..!

இந்தியா-ஆஸ்திரேலியா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 

1-1 என சமன்:

இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

கடைசி போட்டி இன்று:

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி, ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, தொடரை கைப்பற்றும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா வெல்லுமா?

எனினும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.