இந்தியா-தென்னாப்பிரிக்கா.. முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்.. பழிக்கு பழி வாங்குமா?

டி20 தொடரில் கண்ட தோல்வியை சரி செய்யுமா தென்னாப்பிரிக்கா அணி?

இந்தியா-தென்னாப்பிரிக்கா.. முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்.. பழிக்கு பழி வாங்குமா?

டி20யில் இந்தியா வெற்றி:

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. இதில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது. 

ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்:

இதனையடுத்து, இந்தியா - தென்னாப்பரிக்க அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. லக்னோவில் நடைபெறும் முதல் போட்டியில், இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

முன்னணி வீரர்களுக்கு ஓய்வு:

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளதால், இத்தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஷிகர் தவான் கேப்டன்:

ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. 

பழிக்கு பழி?

அதே நேரம், டி20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, ஒருநாள் தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.