இந்தியா-தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட் கிரிக்கெட் :  கேப்டவுனில் இன்று தொடக்கம்!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட் கிரிக்கெட் :  கேப்டவுனில் இன்று தொடக்கம்!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்று, 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கேப்டவுன் மைதானத்தில், இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது கிடையாது.  

தென்னாப்பிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் இந்தியா முதல்முறையாக அந்த அணியை தோற்கடித்து வரலாறு படைத்தது. அதைப்போல கேப்டவுனிலும் இந்தியா முழுமையாக கோலோச்சி புதிய சரித்திரம் படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.