இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி... 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி... 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வென்று 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் இங்கிலாந்து அணி 219 ரன்களில் ஆல் அவுட்டானது. 
 
அதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷபாலி வர்மா 29 ரன்னில் அவுட்டானார்.  ஸ்மிருதி மந்தனா 49  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவர் 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 46 புள்ளி 3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.