இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 5 - வது டெஸ்ட் போட்டி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்கில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 5 - வது டெஸ்ட் போட்டி!!

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பிர்மிங்ஹாமில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது.இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து, 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி, 284 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக பிரிஸ்டோவ் 106 ரன்கள் விளாசி அசத்தினார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

இதனை தொடர்ந்து, 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜரா 50 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம், 257 ரன்கள் இங்கிலாந்தைவிட இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் மேலும் ரன்களை குவித்து வலுவான இலக்கை இங்கிலாந்துக்கு இந்திய அணி நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.