இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா சதம் விளாசல்..!

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது..!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா சதம் விளாசல்..!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கியது. இரண்டாவது நாளில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து வீரர்கள்..

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. இங்கிலாந்து தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் சக் க்ரவ்லி களமிறங்கினர். அலெக்ஸ் 6 ரன்னிலும், சக் 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஒலி போப் 10 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும், ஜக் லீட்ச் ரன் எதுவும் எடுக்காமலும்  அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜானி ப்ரிஸ்டோவ் 12 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும்  களத்தில் உள்ளனர்.