காமன்வெல்த் போட்டியில் பத்தக்க வேட்டையில் இந்திய வீரர்கள்..பட்டியலில் நாம் எத்தனையாவது இடம்?

குண்டு எறிதல், நீளம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்..!

காமன்வெல்த் போட்டியில் பத்தக்க வேட்டையில் இந்திய வீரர்கள்..பட்டியலில் நாம் எத்தனையாவது இடம்?

காமன்வெல்த் தொடரின் ஐந்தாவது நாளில், இந்தியா 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை தட்டிச்சென்றது. 

லான் பவுல் போட்டியில் இந்தியா தங்கம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்லெவத் தொடரின், ஐந்தாவது நாளில், மகளிருக்கான லான் பவுல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி, 17-10 எனும் புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.  இந்திய அணியைச் சேர்ந்த சௌபே, பிங்கி, நயான்மோனி, ரூபா டிர்கே ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்த சாதனை படைத்தனர். 

ஆடவர் டேபிள் டென்னிஸில் அசத்தல்: இதேபோல், ஆடவர் டேபிள் டென்னிஸூக்கான இறுதி போட்டியில், இந்தியா தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கணக்கில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன், ஞானசேகரன் ஆகியோர் அடங்கிய அணி வெற்றி பெற்றது. 

பளிதூக்குதலில் வெள்ளிப் பதக்கம்: ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டியின் 96 கிலோ பிரிவில், இந்திய வீரர் விகாஷ் தரூர் வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். 

பிவி சிந்து வெற்றி: கலப்பு பேட்மிண்டன் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியா - மலேசியா அணிகள் மோதின. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து வெற்றி பெற்றார். ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், மகளிர் இரட்டையர் பிரிவில் காயத்ரி - டிரீசா இணை தோல்வி அடைந்ததால், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. 

இறுதி போட்டிக்கு முன்னேறும் வீரர்கள்: இதனிடையே, குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் ஆகியோரும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். 

பட்டியலில் 6 இடம்: காமன்வெல்த் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று, பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.