டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிப்பு?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி20  உலககோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிப்பு?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. அதன் பிறகு அக்டோபர் 17ஆம் தேதி முதல் இருபது ஓவர் உலககோப்பை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை வெளியாகலம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஓவலில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாளை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் நிலையாக இருக்கும் நிலையில், தொடக்க ஆட்டத்திற்கு பிரித்வ் ஷா மற்றும் தவான் பெயர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த், சூர்யாகுமார் யாதவ், உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், சுழல்பந்து வீச்சாளர் சஹால் , வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தேர்வாக வாய்ப்பு உள்ளது.ஆல்ரவுண்டர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியவும் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.