இந்திய அணியின் புதிய ஜெர்சி ! புதிய டிசைனின் பின்னணி என்ன?
டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி போட்டியிட இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வடிவமைப்பை வெளியிட்டது பிசிசிஐ. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், இந்திய அணியின் ஸ்கிப்பர் மற்றும் அணி தலைவரான, ரோகித் ஷர்மாவும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இருக்கின்றனர். மற்றும் இந்த முறை இணைந்துள்ள சூரியகுமார் யாதவும் புதிய ஜெர்சியில் காட்சியளிக்கிறார்.
ஆடவர்களுக்கானது மட்டுமின்றி, பெண்கள் அணிக்கான செர்சியுமாக உருவாக்கப்பட்ட இந்த ஜெர்சியை அணிந்து, பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோர் இந்த ஜெர்சி போஸ்டரில் செம்ம கெத்தாக இருக்கிறார். அவருடன், பெண்கள் அணியில் உள்ள ரேணுகா சிங் மற்றும் ஷஃபாலி வர்மாவும் மிடுக்கான நடையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.
டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கெடுக்கும் இந்திய அணி இந்த ஜெர்சியை அணிந்து தான் போட்டியிட இருக்கிறது.
இது குறித்து படிக்க : இந்த முறை இந்திய அணியில் இவர்கள் இல்லையா? வேறு யார் தான் இருக்கிறார்கள்?
To every cricket fan out there, this one’s for you.
— BCCI (@BCCI) September 18, 2022
Presenting the all new T20 Jersey - One Blue Jersey by @mpl_sport. #HarFanKiJersey#TeamIndia #MPLSports #CricketFandom pic.twitter.com/3VVro2TgTT
இந்நிலையில், தற்போது வெளிவந்த ஜெர்சியின் வடிவமைப்பு, மக்களை ஈர்த்துள்ளது. ”One Blue ” என்ற தீமில் உருவாகியுள்ள இந்த வடிவமைப்பில் அதிக முக்கோணங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணமும் வெளியாகியுள்ளது. அது என்ன என பார்க்கலாமா?
முக்கோணங்கள்:
-
ரசிகர்களின் உற்சாகம்
-
உத்வேகம்
-
ஆற்றல்
ஆகியவை ஒன்றாக சேர்ந்தது தான் இந்த சின்னம் குறிக்கிறது.
பூ இதழ்கள்:
பிசிசிஐ வைத்து உருவாக்கப்பட்ட இந்த சின்னம், விசுவாசத்தையும், அணியின் தகுதியையும் குறிக்கிறது.
நட்சத்திரங்கள்:
பிசிசிஐ சின்னம் வைத்து உருவாக்கப்பட்ட இந்த நட்சத்திரங்கள், இது வரை வெற்றி பெற்ற மூன்று கோப்பைகளைக் குறிக்கிறது. 1983, 2007 மற்றும் 2011ம் ஆண்டு, இந்தியா வென்ற உலக கோப்பைகளை நினைவுக் கூறும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை, கிட் ஸ்பான்சரான எம்.பி.எல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தனது இன்ஸ்டாகிராமில் இந்த வடிவமைப்பு, தங்களுக்கு பெருமிதம் தருவதாக கூறியுள்ளது. மேலும், இந்த வடிவமைப்பு போட்டோக்களை நேற்று வெளியிட்ட நிலையில், இன்று ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.