கண்ணீருடன் விடைபெற்ற ஜூலன் கோஸ்சுவாமி.. வெற்றியை சமர்ப்பித்த இந்திய வீராங்கனைகள்..!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வாஷ் அவுட் செய்த இந்தியா..!

கண்ணீருடன் விடைபெற்ற ஜூலன் கோஸ்சுவாமி.. வெற்றியை சமர்ப்பித்த இந்திய வீராங்கனைகள்..!

இந்தியா-இங்கிலாந்து:

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில்  தொடரையும் கைப்பற்றியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து:

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

டக் அவுட்டான 5 வீராங்கனைகள்:

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய மகளிர் அணி, 45 புள்ளி 4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் 5 வீராங்கனைகள் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

ரேணுகாவின் வெறித்தன பந்துவீச்சு:

இதனையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை ரேணுகா சிங்கின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 43 புள்ளி 3 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. 

இந்தியா வெற்றி:

இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

ரேணுகா, ஹர்மன்:

அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரேணுகா சிங்கிற்கு ஆட்டத்திற்கான சிறந்த வீராங்கனை விருதும், தொடரில் மொத்தம் 340 ரன்கள் விளாசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு தொடருக்கான சிறந்த வீராங்கனை விருதும் வழங்கப்பட்டது.

கண்ணீருடன் பிரியா விடை:

இதனிடையே, இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றார். அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பித்த சக வீராங்கனைகள், ஜுலன் கோஸ்வாமிக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.