பிரபல கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரரான ஆண்டி கோரம் புற்றுநோயால் காலமானார்..!

ஆண்டி கோரம் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல்..!

பிரபல கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரரான ஆண்டி கோரம் புற்றுநோயால் காலமானார்..!

பிரபல சர்வதேச கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே வீரரான ஆண்டி கோரம் புற்றுநோயால் உயிரிழந்தது விளையாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆண்டி கோரம். மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்காக விளையாடியுள்ளார். கால்பந்தில் கோல் கீப்பர் மற்றும் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கல்லியவர் கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவரின் உடல் நிலை மோசமாகியதை அடுத்து சிகிச்சை பலனின்றி ஆண்டி கோரம் தனது 58-வது வயதில் உயிரிழந்தார். ஆண்டி கோரம் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.