தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி - 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி - 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி-20 குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 55 ரன்களை குவித்தார். இதனைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 16.5 ஓவர்களில் 87 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.