”இனி பெண்களுக்கும் ஆண்கள் சம்பளம்”.. பிசிசிஐ அறிவிப்பால் இந்திய பெண்கள் அணி உற்சாகம்..!

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் வாயிலாக அறிவிப்பு..!

”இனி பெண்களுக்கும் ஆண்கள் சம்பளம்”.. பிசிசிஐ அறிவிப்பால் இந்திய பெண்கள் அணி உற்சாகம்..!

கிரிக்கெட்:

இந்தியா மட்டுமின்றி உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கக் கூடிய ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். என்ன தான் நாட்டிற்குள் ஆயிரம் பேதங்களும், சண்டை சச்சரவுகளும் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேருவது என்னவோ கிரிக்கெட்க்காகத் தான். 

பெண்கள் கிரிக்கெட்:

ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த இந்த விளையாட்டை பெண்களும் விளையாடத் தொடங்கினர். ஆரம்பத்தில் 
பெண்களின் கிரிக்கெட் போட்டிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஆண்களின் கிரிக்கெட் போட்டிக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கின்றதோ அதே அளவு பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கும் இருந்து வருகிறது. 

பெண்களின் சாதனை:

அதற்கு காரணம் பெண்களும் இந்த விளையாட்டில் பல மைல்கற்களை எட்டுவது தான். இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எட்டாத சாதனைகளையும் பெண்கள் எட்டியிருப்பதால், இப்போது கிரிக்கெட் ஆண், பெண் என்றில்லாமல் பொதுவாக பார்க்கப்பட்டு வருகிறது. 

பிசிசிஐ-யின் அறிவிப்பு:

இந்த நிலையில், பிசிசிஐயின் செயலாளர் அறிவித்திருக்கும் அறிவிப்பு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினரை 
உற்சாகமடைய வைத்திருக்கிறது. அதாவது, ”பாலினப் பாகுபாட்டைக் களையும் விதமாக பிசிசிஐ எடுத்துள்ள 
முதல் அடி இது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வீராங்கனைகள் அனைவருக்கும் சம ஊதிய கொள்கையை 
செயல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய இந்திய கிரிக்கெட்டின் நகர்வு இது.

 

ஒரே சம்பளம்:

இனி ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6லட்சம் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரூ.3லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இது மகளிர் கிரிக்கெட்டிற்கான எங்களது அர்ப்பணிப்பு. இதற்கு ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் ஆணையத்திற்கும் 
நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 

7-வது முறை கோப்பை:

கடந்த 1-ம் தேதி வங்க தேசத்தில் 20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசியக் கோப்பை போட்டி நடைபெற்றது. 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையோடு மோதிய இந்திய அணி வெற்றி பெற்று 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.