டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த - கேப்டன் ஹர்தமன்ப்ரீத் கவுர்!!

டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த - கேப்டன் ஹர்தமன்ப்ரீத் கவுர்!!

இந்தியாவில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த முன்னாள் வீராங்கணை மிதாலி ராஜை பின்னுக்குத் தள்ளி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பரீத் கவுர் 31 ரன்களில் ஆட்டமிழந்த போதும் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த ஆட்டத்தின் மூலம் 123 போட்டிகளில் 2 ஆயிரத்து 372 என்ற அதிக ரன்களை எடுத்த சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக முன்னாள் வீரர் மிதாலிராஜ் 2 ஆயிரத்து 364 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் வெளியேறிய 6ம் நாள் ஹர்மன்ப்ரீத் கவுர் அவரின் சாதனையை முறியடித்துள்ளார்.