துப்பாக்கி சுடுதல் தளத்துக்கு மறைந்த சந்திரோ தோமரின் பெயர்... உத்திரப் பிரதேச அரசு உத்தரவு...

உத்திரபிரதேசத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி தளத்துக்கு  மறைந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரோ தோமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

துப்பாக்கி சுடுதல் தளத்துக்கு மறைந்த சந்திரோ தோமரின் பெயர்... உத்திரப் பிரதேச அரசு உத்தரவு...
ஷூட்டர் தாதி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரோ தோமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 30ம் தேதி உயிரிழந்தார். 
உத்தரபிரதேச மாநிலம் பாக்பாட்டைச் சேர்ந்த சந்திரோ தோமர் தனது 65 வயதில் போட்டிகளில் பங்கேற்றார். 30-க்கும் மேற்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார். மேலும் உலகின் மிகப் வயதான பெண் ஷார்ப் ஷூட்டர் என்கிற பெருமையையும் பெற்றார்.
 
இந்த நிலையில் கொரோனாவால் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் சந்திரோ தோமருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நொய்டாவில் உள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி தளத்துக்கு அவரது பெயரை சூட்டி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.