டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி...

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் வெற்றி பெற்றதன் மூலம் மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தான் வீரர் நூர் இஸ்லாமை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் கஜகஸ்தான் வீரர் 9-2 என முன்னிலை பெற்றார். எனினும் பிறகு சிறப்பாக விளையாடி அதை 9-7 எனக் ரவிக்குமார் தாஹியா குறைத்தார். இந்நிலையில் புள்ளிக்கணக்கில் நுரிஸ்லாம் முன்னிலையில் இருந்த போதும், FALL முறையில் ரவிக்குமார் அவரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மகளிர் மட்டுமே பதக்கங்களை வென்றுள்ள நிலையில், முதலாவதாக ஆடவர் பிரிவில் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரையிறுதி போட்டியில் ரவிக்குமார் வெற்றிப் பெற்றதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் சுசில் குமாருக்கு பின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரவிக்குமார் தாஹியா பெற்றுள்ளார்.

ஏற்கெனவே இந்தியா ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில் மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, 86 கிலோ மல்யுத்தம் அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீரர் டேவிட் மோரிஸை எதிர்கொண்ட இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியை தழுவினார்.