உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய பிவி.சிந்து..!

காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற முடியாத சூழல்..!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய பிவி.சிந்து..!

காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவதாக பிவி.சிந்து அறிவித்துள்ளார்.  27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையில், முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காமன்வெல்த் பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியின் போதே காலில் காயம் ஏற்பட்டதாகவும், பயிற்சியாளர் மற்றும் பிசியோவின் உதவியுடன் காமன்வெல்த் போட்டியில் விளையாடியதாகவும்  கூறியுள்ளார். ஐதராபாத் திரும்பியவுடன் ஸ்கேன் செய்ததில் இடது காலில் அழுத்த முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் சில வாரங்கள் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் பிவி சிந்து தெரிவித்துள்ளார்.