பாகிஸ்தானின் தோல்வி.. நேரலையில் வாய்விட்டு சிரித்த ஜிம்பாப்வே செய்தி வாசிப்பாளர்.. வீடியோ வைரல்..!

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி..!

பாகிஸ்தானின் தோல்வி.. நேரலையில் வாய்விட்டு சிரித்த ஜிம்பாப்வே செய்தி வாசிப்பாளர்.. வீடியோ வைரல்..!

ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று 
வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகளில் கடைசியாக நடந்த பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. 

சீன் வில்லியம்ஸ் 31:

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 
அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்திருந்தார். 

ஜிம்பாப்வே 130:

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 130 ரன்களை மட்டுமே 
எடுத்திருந்தது. இதனையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. எப்படியும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என பெரும்பான்மையான ரசிகர்கள் உறுதியாக கூறிய போதிலும், ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பவுலிங்கில் பட்டயை கிளப்பிய ஜிம்பாப்வே: 

யாரும் எதிர்பாரா வண்ணம் ஜிம்பாப்வே அணியின் பவுலிங் பட்டயை கிளப்ப பாகிஸ்தான் அணி ஆட்டம் கண்டது. 
அதிகபட்சமாக அந்த அணியில் ஷான் மசூத் 44 ரன்கள் சேர்த்திருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்தனர்.

ஒரே பந்து 3 ரன்கள்: 

இறுதியாக ஒரே ஒரு பந்தில் 3 ரன்கள் தேவை என இருந்த நிலையில், ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்தி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றனர். கடைசி ஓவரில் இரு பந்துகளில் 2 விக்கெட்களை சாய்த்து ஜிம்பாப்வே அசத்தியது. 

பாகிஸ்தானுக்கு பின்னடைவு:

இதன் மூலம் இத்தொடரில் முதல் வெற்றியை ஜிம்பாப்வே பதிவு செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இதுவரை ஒரு வெற்றியும் பெறாமல் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது. 

செய்தி வாசிப்பாளர் வீடியோ:

இந்த நிலையில், ஜிம்பாப்வே வெற்றியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அந்த வகையில், ஜிம்பாப்வேயில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்திகளை வாசிக்கும் முன்பு, ஜிம்பாப்வேவியின் வெற்றியை பார்த்துவிட்டு கேமரா முன்பே வாய்விட்டு சிரித்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ:

10 வினாடிகளுக்கும் மேலாக அவர் வாய்விட்டு சிரித்துவிட்டு பிறகு பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு 
தொடர்ந்து செய்திகளை வாசிக்கத் துவங்குகிறார். இந்தக் காட்சியை காண்போர் லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.